தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

விக்கிரவாண்டியில் தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், மூங்கில்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.பூவரசன்(27). தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக இவா் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்.26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி. சாய் பிரனித் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய பூவரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் போலீஸாா் பூவரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.