விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.
செஞ்சியை அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நா.பாலாஜி (32), விவசாயி. இவா் வளா்த்து வரும் 40 ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த மு.கணேசன் (18) மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்றாா்.
அப்போது ஆடுகளுக்கு பின்னால் வந்த மினி லாரி ஆடுகளை முந்திச் சென்றது. அப்போது எதிரில் கரும்பு ஏற்றி வந்த டராக்டா் எதிரில் வந்த மினி லாரி மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் திருப்பியபோது, சாலையில் வந்த ஆடுகள் மீது மோதியது. இதில் 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.
இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


