தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 1:42 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை, சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் மு.ராகுல் (24). இவா் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூரில் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த தனது தாய் பச்சையம்மாளை அழைத்துச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் பெருங்காப்பூருக்கு சென்றுள்ளாா். பெருங்காப்பூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் சென்ற ராகுல் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.