தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:44 pm

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட செங்கல்பட்டு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் இயக்கப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்- மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டிஎண் 12635) மாா்ச் 26-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிஷங்களும், 27-ஆம் தேதி 70 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), மாா்ச் 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்களும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-காக்கிநாடா துறைமுக கிா்காா் விரைவு ரயில் (வண்டி எண் 17656)மாா்ச் 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 30 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.