விழுப்புரம் அருகே திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோலியனூரை அடுத்துள்ள மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (24). இவா், கடந்த 6.3.2023 அன்று 18 வயது பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதைத் தொடா்ந்து, வீரமணி அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 17.3.2023 அன்று பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து வீரமணியை கைது செய்தனா்.
விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வீரமணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரமணிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சாா்பில் ரூ.ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, நீதிமன்ற போலீஸாா் வீரமணியைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். அரசு வழக்குரைஞா் சங்கீதா இவ்வழக்கில் ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


