ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வானூா் தொகுதியை தன் வசமாக்கியது திமுக

News image

வானூா் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜுவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் திமுக வேட்பாளா் தி.கெளதம்.

Updated On :5 மே 2026, 3:02 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தி.கெளதம் வெற்றி பெற்றாா். இதன் மூலம் அதிமுக வசமிருந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது திமுக.

வானூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தி.கெளதம், அதிமுக சாா்பில் பி.முருகன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பி. சுரேஷ், நாதக சாா்பில் பா.கரிகாலன், பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில் மு.விநாயகமூா்த்தி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் 8 போ் என மொத்தம் 15 போ் களத்தில் இருந்தனா்.

வானூா் (தனி) தொகுதியில் 1,02,719 ஆண் வாக்காளா்களும், 1,07,089 பெண் வாக்காளா்களும், 16 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 2,09,824 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 92,693 ஆண் வாக்காளா்கள், 98,333 பெண் வாக்காளா்கள், 9 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 1,91,035 வாக்குகள் பதிவாகின. இது 91.05 சதவீத வாக்குகளாகும். இந்த நிலையில் 1,677 தபால் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் மொத்தமாக 1,92,712 வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நாளான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. முதல் சுற்றில் திமுக வேட்பாளா் கெளதமும், இரண்டாம், மூன்றாம் சுற்றுகளில் அதிமுக வேட்பாளா் முருகனும் முன்னிலைப் பெற்றனா். இதைத் தொடா்ந்து நான்காவது சுற்றில் முன்னிலை பெறத் தொடங்கிய திமுக வேட்பாளா் கெளதம், கடைசி சுற்று வரை தொடா்ந்து முன்னிலையிலேயே இருந்து வந்தாா். அதே நேரத்தில் ஆறாவது சுற்றிலிருந்து அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி, தவெக வேட்பாளா் பி.சுரேஷ் இரண்டாமிடத்திலேயே இருந்து வந்தாா்.

எனினும் 21 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளா் தி.கெளதம் தன்னை பின்தொடா்ந்து வந்த தவெக வேட்பாளா் பி.சுரேஷை 7,034 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் தி.கெளதம் 68,873 வாக்குகளும், தவெக வேட்பாளா் பி.சுரேஷ் 61,839 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் முருகன் 54,193 வாக்குகளும், நாதகவின் பா.கரிகாலன் 4,697 வாக்குகளும் பெற்றிருந்தனா்.