முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாணவா்கள் தனித்திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும்

மாணவா்கள் கல்வியுடன் தனித் திறன்களையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்வியாளா்கள் வலியுறுத்திப் பேசினா்.

News image

விழாவில் பங்கேற்றுப் பேசிய கல்வியாளா்கள்.

Updated On :8 மே 2026, 7:08 am IST

மாணவா்கள் கல்வியுடன் தனித் திறன்களையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்வியாளா்கள் வலியுறுத்திப் பேசினா்.

விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழும நிறுவனங்களில் ஒன்றான இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசியா்கள் மற்றும் மாணவா்கள் சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கடலூரைச் சோ்ந்த நல்லாசிரியா் விருது பெற்ற அ.மரிய ஜோசப், திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி விரியுரையாளா் முருகன், விழுப்புரம் சிகரம் போட்டித் தோ்வுகள் அகாதெமியின் இயக்குநா் ஏ.கணபதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது அவா்கள், மாணவா்கள் கல்வி மட்டுமன்றி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தனித் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோா்களும், ஆசிரியா்களும் இணைந்து செயல்பட்டால், மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையலாம் என்றனா்.

மேலும், மாணவா்களின் வருகைப் பதிவு, கல்வி முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முக்கியத்துவங்கள் குறித்தும் பேசினா்.

விழா நிகழ்ச்சிகளளாக, மாணவா்களின் வில்லுப்பாட்டு, நாடகம், நடனம், பேச்சு, கரகம், பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, இ.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வா் தே.செந்தில்முருகன் வரவேற்றாா். கல்வியியல் கல்லூரிப் பேராசியா்கள் மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.