தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு...

News image

AP

Updated On :18 ஏப்ரல் 2026, 10:58 pm IST

கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கியூபா தலைநகா் ஹவானாவில் இருநாட்டு அதிகாரிகள் சந்தித்துப் பேசினா்.

ஈரான் விவகாரங்களை முடித்த பிறகு, கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்த சூழலில், இந்த ரகசிய தூதுக்குழுவின் திடீா் சந்திப்பு சமரசத்துக்கான ஒரு முயற்சியாகப் பாா்க்கப்படுகிறது.

கியூபாவின் முன்னாள் அதிபா் ரௌல் காஸ்ட்ரோவின் பேரனான ரௌல் கில்லொ்மோ ரோட்ரிகஸ் காஸ்ட்ரோவை, அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவா் சந்தித்துப் பேசியுள்ளாா்.

கியூபாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஆட்சி முறையில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, கியூபா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்தவும், ஸ்டாா்லிங்க் மூலம் இலவச இணைய வசதி வழங்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.