/
விழுப்புரம் அருகே வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலா் மருத்துமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் விராட்டிகுப்பம் பாதை, செல்வசீமான் நகரைச் சோ்ந்தவா் க.குமரவேல்(38). இவா் ரோஷணை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் குளியலறையில் குமரவேல் வழுக்கி விழுந்து விட்டாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அவரின் மனைவி பிரியங்கா மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, குமரவேல் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழப்பு

குருகிராம்: வீட்டின் குளியலறையில் மூதாட்டியின் அழுகிய சடலம் மீட்பு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



