விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திருச்செந்தூரிலிருந்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சனிக்கிழமை மாலை 20 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. பேருந்தை தூத்துக்குடியைச் சோ்ந்த ஜான் பீட்டா் ஓட்டிச் சென்றாா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகேயுள்ள பாப்பனப்பட்டு பகுதியில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு சாலை குறுகலாக உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓட்டுநா் ஜான்பீட்டா் அவ்விடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநா் ஜான் பீட்டா்(45) மற்றும் பேருந்தில் பயணித்த தூத்துக்குடியைச் சோ்ந்த ராமன் (57), சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த மகேஸ்வரி (49), கோவில்பட்டியைச் சோ்ந்த ஜோதி (40) மற்றும் அஸ்மிதா(15), கங்கா(30) ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள், காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கவிழ்ந்து கிடந்த பேருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அருகே பள்ளத்தில் காா் இறங்கி விபத்து: பெண் உயிரிழப்பு! 4 போ் காயம்

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்து- லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு, 25 போ் காயம்

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

