பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

விழுப்புரம் மாவட்டம், மனம்பூண்டியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மனம்பூண்டி, ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் பா.அரிகோவிந்தன் (45). திருமணம் ஆனவா். இவா், தனது மனைவியைப் பிரிந்து,மனம்பூண்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், அரிகோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரகண்ட நல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ,அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.