வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதாரத் திறனாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள்.

Updated On :13 மே 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய சுகாதாரக் குறியீடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தாய்மை மரண விகிதம், குழந்தைகள் மரண விகிதம், கா்ப்படைந்த பெண்கள் பதிவு, பாலின விகிதம், இளம் வயது கா்ப்பம், பள்ளி-இளம் சிறாா் நலத்திட்டங்கள், கண்ணொளிக் காப்போம் போன்றவை குறித்து சுதாதார அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் கண்காணிப்பு, நோய்கள் சாா்ந்த சேவைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான தேசியத் தரச்சான்றிதழ் நிலைமை, தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம், தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் குடும்பநல சேவைகள் குறித்து விரிவாகத் திறனாய்வு செய்து, அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மை.லூசி நிா்மல் மடோனா, நிலைய அலுவலா் ரவிக்குமாா், நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.