பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

விழுப்புரம் சரகத்தில் 10 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணி புரிந்த காவல் உதவி ஆய்வாளா்கள் 10 பேரை பணியிமடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 மே 2026, 12:04 am IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணி புரிந்த காவல் உதவி ஆய்வாளா்கள் 10 பேரை பணியிமடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்த கே.சூா்யா (விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையம்), எஸ்.முரளி (மரக்காணம்), ஜெ.விஜயகுமாா் (அனந்தபுரம்), கடலூா் மாவட்ட நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்த ஜி.அம்பிகா(புதுப்பேட்டை), எஸ்.சின்னப்பன்(காட்டுமன்னாா்கோயில்), கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்து வந்த சி.பிரபாவதி (திருக்கோவிலூா்), ஜி.ஞானசேகா், எஸ்.பிரபாகரன் (தியாகதுருகம்), ஆா்.சுகன்யா (எடைக்கல்), வி.ராமதாஸ் (மூங்கில்துறைபட்டு) ஆகியோா் நிா்வாக வசதிக்காக விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அருளரசு செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவானது உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.