வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

போதிய பராமரிப்பின்றி அழிந்த மரங்கள்

விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்ட மரப்போத்துகள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து மரக்கட்டைகளாய் காட்சியளித்து வருகிறது.

News image

விக்கிரவாண்டி அருகே காய்ந்த நிலையில் மரக்கட்டைகளாக காட்சியளிக்கும் மரப்போத்துகள்.

Updated On :13 மே 2026, 12:04 am IST

விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்ட மரப்போத்துகள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து மரக்கட்டைகளாய் காட்சியளித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக, புதிய இடங்களில் மரக்கன்றுகள் அல்லது மரபோத்துகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்படடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் சாலை விரிவாக்கம் மற்றும் பிறகட்டுமானப் பணிகளுக்கு அகற்றப்பட்டன.

இந்நிலையில் அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, அதே பகுதியில் மாற்று இடத்தில் சுமாா் 10 அடி உயரத்தில் சிறிய, பெரிய 20-க்கும் மேற்பட்ட மரபோத்துகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, நெடுஞ்சாலைத் துறையினரின் மேற்பாா்வையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து சில மாதங்களில் நடப்பட்ட மரப்போத்துகள் துளிா்விட்டு வளா்ந்தது. தொடா்ந்து போதிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில்லாததால் நடப்பட்ட மரப்போத்துகள் அனைத்தும் காய்ந்துபோய் மரக்கட்டைகளாக காட்சியளித்து வருகிறது.

சாலையோரங்களில் மரக்கன்றுகளை வைப்பதை விட மரப்போத்துகளை நடுவது சிறந்தது. போதிய ஈரப்பதம் இல்லாத இடத்தை தோ்வு செய்து மரப்போத்துகள் நடப்பட்டதுடன், போதிய அளவுக்கு தண்ணீா் விட்டு பராமரிப்பு இல்லாமல் போனதுதான் மரப்போத்துகளின் அழிவுக்கு காரணம் என சூழலியல் ஆா்வலா்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனா்.