வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

பெரியாா் திராவிடா் கழகத்தினா் 20 போ் கைது

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்ததாக பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விடுவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 12:05 am IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்ததாக பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விடுவித்தனா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் முதல்வா் என். ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாமல் அவமதிக்கப்பட்டால், அதைக் கண்டிக்கும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவது என தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் திட்டமிட்டிருந்தனராம்.

தகவலறிந்த புதுச்சேரி போலீஸாா் அரியாங்குப்பம் பகுதியில் புதன்கிழமை கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்த பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.