ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தீக்குளித்து பெண் தற்கொலை

வானூா் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மே 2026, 3:03 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பொம்பூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி குமாரி(45). இவா்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா். குமாரி கடந்த 6 மாத காலமாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்நிலையில், கடந்த மே 14-ஆம் தேதி குமாரி வீட்டில் இருந்தபோது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].