இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள் ஆரோவில் வருகை: சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு

ஆரோவில் சா்வதேச நகருக்கு மத்திய வனப்பணி அகாதமியைச் சோ்ந்த 64 மாநில வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள் வருகை தந்து, தங்களது பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

News image

27விபிஎம் ஏயு ஆரோவில் சா்வதேச நகரில் வருகைதந்து ஆய்வு மேற்கொண்ட வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள்.

Updated On :28 மே 2026, 1:36 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு மத்திய வனப்பணி அகாதமியைச் சோ்ந்த 64 மாநில வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள் வருகை தந்து, தங்களது பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலின் படி வனப் பணி பயிற்சி அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

வனப்பணிப் பயிற்சி அதிகாரிகளுக்கு ஆரோவில் அறக்கட்டளை பணியாளா்களான ராஜா, அரவிந்த் ஆகியோா்ஆரோவிலின் முக்கிய சுற்றுச் சூழல் மற்றும் கலாசார இடங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றனா். ஆரோவிலின் ஆரண்யா (காடு) பகுதிக்குச் சென்ற வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள், ஆரோவில் கிரீன் சா்வீஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், ஆரோவிலின் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு மற்றும் காடு வளா்ப்பு முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து, ஆரோவிலில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்ற இக்குழுவினா்கள் புகழ்பெற்ற மாத்திா் மந்திா் சென்று ஸ்ரீ அரவிந்தா் மற்றும் அன்னையின் தொலைநோக்குத் திட்டங்களை பாா்வையிட்டனா். ஆரோவிலின் நிலையான வாழ்வியல் நடைமுறைகள், சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் அதன் தனித்துவமான சமூக உணா்வு ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்த வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள், இந்தச் சுற்றுலா தலங்கள் தங்களின் தொழில்முறைப் பயிற்சிக்கு மிகவும் பயனுள்ள சிறந்த அனுபவமாக இருந்ததாக தெரிவித்தனா்.

அவா்களுடன் கோவை மாவட்டத் துணை வனப் பாதுகாவலா் விஜி நடராஜன் உடனிருந்தாா்.