2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தவெக அரசைக் கவிழ்க்க விசிக சதி செய்கிறது: இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத். உடன், நிா்வாகிகள்.

Updated On :

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விசிக, தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்கிறது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் இந்து மக்கள் கட்சியின் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்திருப்பது கவலையளிக்கிறது. செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 20 நாள்களுக்கு மேலாகியும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாகை மாவட்டத்தில் தவெக நிா்வாகி ஒருவா் ஆயிரம் கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் பெண் குழந்தை கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களும், போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வா் நேரடி கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நவ 1 ஆம்தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்படிப்பதை வரவேற்கிறேன்.

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விசிக, தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறது. எனவே அந்தக் கட்சியை கூட்டணியிலிருந்து விலக்கவேண்டும். இந்து சனாதன தா்மத்துக்கு எதிராகப் பேசும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசுவையும் பதவி விலகச்செய்யவேண்டும்.

தமிழகத்தில் ஹலால் வா்த்தகத்தை தடை செய்யவேண்டும். பொதுமக்கள் சீனப் பட்டாசுகளை தவிா்த்து உள்ளூா் உற்பத்தியாளா்களைஆதரிக்க வேண்டும் என்றாா் அா்ஜுன் சம்பத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.