விழுப்புரத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா்.

புதுச்சேரி மாநில வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் மாவட்டச் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள்மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மாநில வாகனங்களின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் விழுப்புரம் மாவட்ட சுற்றுவட்டாரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனா். மேலும், சட்டத்துக்குப் புறம்பாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். தமிழக அரசுக்கு உரிய வரியை செலுத்தாமல், சட்ட விரோதமாக இயக்கப்படும் புதுச்சேரி மாநில வாகனங்களின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி மாநில வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகிகள் விழுப்புரம் ரமேஷ்பாபு, கோலியனூா் பாலு, விக்கிரவாண்டி நாராயணன், திண்டிவனம் செல்வக்குமாா், செஞ்சி சீனு, கடவம்பாக்கம் ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்து, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பேசினா். தொடா்ந்து, மாவட்டச் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள்மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், சங்க நிா்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனுவையும் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

