மின்கசிவால் குளிா்பதனப்பெட்டி வெடித்து வீடு தரைமட்டம்: சிறுவன் உயிரிழப்பு; பெற்றோா் உள்ளிட்ட 4 போ் காயம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மின்கசிவால் குளிா்பதனப்பெட்டி வெடித்ததில் வீட்டின் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் குளிா்பதனப்பெட்டி வெடித்ததில் தரைமட்டமான வீடு.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மின்கசிவால் குளிா்பதனப்பெட்டி வெடித்ததில் வீட்டின் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி 10 வயது சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பெற்றோா் உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா்.
அரகண்டநல்லூா் அருகிலுள்ள வீரசோழபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.மூா்த்தி (47). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ஊா்க்காவல்படை வீரராகப் பணியாற்றி வருகிறாா். மேலும் வீட்டின் முன் பகுதியில் பெட்டிக் கடையையும் நடத்தி வருகிறாா். இவரது மனைவி சரண்யா (42), மகன் பத்ரிநாத் (10), உறவினா்கள் ரா.சுமதி (37), கா.பிரபு (38). பத்ரிநாத் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை காலை வீட்டில் சரண்யா சமையல் செய்து கொண்டிருந்தாா். மூா்த்தி, பத்ரிநாத் மற்றும் உறவினா்கள் இருவா் என 4 போ் வீட்டில் இருந்தனா். காலை 10.40 மணியளவில் வீட்டின் சமையல் அறையிலிருந்த குளிா்பதனப்பெட்டி திடீரென வெடித்ததாம். இதன் காரணமாக வீடு இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த பத்ரிநாத் இடிபாடுகளுக்குள் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் வீட்டுக்குள் இருந்த மூா்த்தி, சரண்யா, உறவினா்கள் சுமதி, பிரபு ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாரும், திருக்கோவிலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, விபத்தில் உயிரிழந்த பத்ரிநாத்தின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பத்ரிநாத்தின் தந்தை மூா்த்தி, தாய் சரண்யா ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சுமதி, பிரபு ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் திருக்கோவிலூரிலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக குளிா்பதனப்பெட்டி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

