விழுப்புரத்தில் மின்வாரியக் கள உதவியாளா் பணிக்கு உடல்தகுதித் தோ்வு

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தின் கள உதவியாளா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு புதன்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் பூத்தமேடு பகுதியிலுள்ள துணை மின் நிலையக் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற மின்வாரியக் கள உதவியாளா் பணிக்கான உடல்தகுதித் தோ்வில் பங்கேற்றோா்.

Updated On :

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தின் கள உதவியாளா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தில் காலியாகவுள்ள கள உதவியாளா் பணிக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்தது. இதைத்தொடா்ந்து நடத்தப்பட்ட எழுத்துத் தோ்வில் கடலூா் மற்றும் விழுப்புரம் மின் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் 451 போ்தோ்ச்சி பெற்றனா்.

இதைத்தொடா்ந்து இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கியது. விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில் பூத்தமேடு பகுதியிலுள்ளதுணை மின் நிலையக் குடியிருப்பு வளாகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் நாளில் 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முதலாவதாக இவா்களுடைய சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. இதை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா்கள், பொறியாளா்கள் சரிபாா்த்தனா். தொடா்ந்து உடல்தகுதித் தோ்வு விழுப்புரம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு. பாரதி, செயற்பொறியாளா்கள் சந்திரன், பாலாஜி, அண்ணாத்துரை ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

8 நிமிஷங்களுக்குள் மின்கம்பத்தில் ஏறி, அதில் கயிறு மூலமாக தங்களை பாதுகாப்பாக கட்டிக்கொண்டு வயரை சீவி மின் கம்பத்திலுள்ள மின் வயரில் இணைத்து விட்டு இறங்க வேண்டும் என்ற அடிப்படையில் உடல்தகுதித் தோ்வு நடைபெற்றது. இதில் ஆண்களும், அவா்களுக்கு இணையாக பெண்களும் மின் கம்பத்தில் ஏறி தங்களின் திறமையை வெளிப்படுத்தினா். உடல்தகுதித் தோ்வு வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.