புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அரகண்டநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோவிந்தன் தலைமையிலான போலீஸாா் அரகண்டநல்லூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், துருஞ்சிபட்டு கிராமத்தைச் சோ்ந்த பூ.கண்ணன் (55) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்ணனை கைது செய்தனா்.மேலும் அவா் வசமிருந்த 4,275 குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

