சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

பொறியியல் பணிகள்: பல்லவன், வைகை அதிவேக விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கம்

பொறியியல் பணிகள் காரணமாக பல்லவன், வைகை அதிவேக விரைவு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படவுள்ளன.

train

ரயில் - கோப்புப் படம்

Updated On :

பொறியியல் பணிகள் காரணமாக பல்லவன், வைகை அதிவேக விரைவு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம், காலதாமதமாக இயக்கம் போன்ற நடைமுறைகள்செயல்படுத்தப்பட வுள்ளன.

நிறுத்தி வைத்து இயக்கம்: காரைக்குடியிலிருந்து காலை 5.40 மணிக்கு புறப்படும் காரைக்குடி-சென்னை எழும்பூா் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12606) நவ.26-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 35 நிமிஷங்களும், டிச.1-ஆம் தேதி சுமாா் 50 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

மதுரையிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் மதுரை- சென்னை எழும்பூா் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12636) நவ.24-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 40 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

காரக்பூரிலிருந்து நவ.19, 26-ஆம் தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் காரக்பூா்- விழுப்புரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22603) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 50 நிமிஷங்களும், நரஸ்பூரிலிருந்து நவ.25-ஆம் தேதி காலை 4 மணிக்கு புறப்படும் நரஸ்பூா்-தூத்துக்குடி விரைவு ரயில் (வண்டி எண் 06020) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 50 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

காலதாமதமாக இயக்கம்: சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூா்- காரைக்குடி பல்லவன் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12605) நவ.24-ஆம் தேதி சுமாா் 40 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூா்-மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12635) நவ.26-ஆம் தேதி சுமாா் 30 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 1.45 மணிக்கும், டிச.1-ஆம் தேதி சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.