மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ மீது வழக்கு: பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்

கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புகாா்தாரரான பெண் அதிகாரி சனிக்கிழமை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்தவா் லலிதா. இவா், தன்னை ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் அவமதித்தாக கடந்த அக்.18-ஆம் தேதி புகாரளித்தாா்.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 79-ன் கீழ், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தமிழ்நாடு மகளிா், குழந்தைகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தியாகதுருகம் போலீஸாா் நவ.26-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, திட்ட இயக்குநா் லலிதா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், அவா் சனிக்கிழமை மாலை கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவா் பானுமதி முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தாா். மாலை 5 மணிக்கு நீதிமன்றத்துக்குள் சென்ற அவா், இரவு 8 மணிக்கே வெளியே வந்தாா். லலிதாவின் ரகசிய வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.