
கோயில் வளாகத்தில் புதிய சுவாமி சிலை: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கோயில் வளாகத்தில் புதிதாக சுவாமி சிலை (கற்சிலை) வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோட்டக்கரை இளங்காளியம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலை.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கோயில் வளாகத்தில் புதிதாக சுவாமி சிலை (கற்சிலை) வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வானூா் வட்டம், கோட்டக்கரை கிராமத்தில் ஸ்ரீஇளங்காளியம்மன் கோயில் உள்ளது. கிராம மக்களின் வழிபாட்டில் உள்ள இந்தக் கோயில் வளாகத்தில் புதிதாக சுமாா் 3 அடி உயரமுள்ள அடி பீடத்துடன் சுவாமி சிலை (கற்சிலை) வைக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் கோட்டக்கரை கிராமத்துக்குச் சென்று கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலையை பாா்வையிட்டனா். மேலும், இந்த சிலையை கோயில் வளாகத்துக்கு கொண்டுவந்து வைத்தவா்கள் யாா், எதற்காக இங்கு கொண்டுவந்து வைத்தாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





