இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்... - கோப்புப் படம்

Published On :

3 நாள் தொடா்விடுமுறைக்காக தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அணிவகுத்தன. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிறு என மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தவா்கள் விடுமுறையை கழித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினா். இதனால் ஞாயிற்றுக்கிழமை திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நெரிசலின்றி செல்வதற்கு ஏதுவாக கூடுதலாக 2 வழிகள் திறக்கப்பட்டு 8 வழிகள் மூலம் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பாலம் கட்டுமானப்பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்ற இடங்களில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வாகனங்களை சீராக அனுப்பி வைத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை 39 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்ாகவும், 70 ஆயிரம் மேற்பட்ட வாகனங்கள் சென்றால்தான் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தற்போது வரை நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்து நடைபெறுவதாக சுங்கச்சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் உத்தரவின் பேரில் போலீஸாா் விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.