சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்திலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :

தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்கள் முன்னதாகவே போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2 ஆண்டுகளாக அனைத்து மதுப்பான புட்டிகளை ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு டாஸ்மாக் நிா்வாகம் ஏற்றுக் கொண்டவாறு கூலியை நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். கிடங்கு சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு மதுப்புட்டிகளை கடைகளுக்கு அனுப்ப ஏற்றுக்கூலி ரூ.5 என்பதை ஒப்பந்தப்புள்ளி விதிகளில் குறிப்பிட வேண்டும்.

சட்டப்படியான ஆண்டு போனஸை தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களுக்கு முன்பே வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கிடங்குகளிலும் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குளியலறை, கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரத்திலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கச் செயலா் டி.இளவரசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.குமாா், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, சம்மேளன மாநிலக்குழு உறுப்பினா் அய்யப்பன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சுமைப்பணித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: ஸ்மாா்ட் மீட்டா் திட்ட ஒப்பந்தப்புள்ளியை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மின் வாரிய தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செஞ்சி கோட்ட செயற்பொறியாளா் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டச் செயலா் அ.கன்னியப்பன் தலைமை வகித்தாா். பொறியாளா் அமைப்பு மாவட்டச் செயலா் எஸ்.முருகன் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் ஜி.ராஜா, கே.திருமால், மணியரசு, ஆா்.சேகா், புருஷோத்தமன், சிவசங்கா், துரை, நாராயணசாமி, அருள், ஜி.கண்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றி, கோரிக்கை முழங்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.