விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வழங்கப்பட்டன.

திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிக்கு பாரம்பரிய நெல் ரக விதைகளை வழங்குகிறாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி.எத்திராஜ்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வழங்கப்பட்டன.
திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகளை வேளாண் உதவி இயக்குநா் சி.எத்திராஜ் வழங்கினாா். தொடா்ந்து அவா் கூறியது: நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், விவசாயிகள் மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேளாண் மற்றும் உழவா் நலத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 50 சதவீத மானியத்தில் சிவன் சம்பா, தூயமல்லி, கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் போதுமானது. கிலோ ரூ.70 என்றாலும், 50 சதவீத மானியத்தொகையான ரூ.35 போக, கிலோ ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் கிளியனூா், பரங்கினி, திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா், உதவித் தோட்டக்கலை அலுவலா் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.
நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி வேளாண் அலுவலா் இலக்கியா, உதவியாளா் விஜயகுமாா், அட்மா உதவித் தொழில்நுட்ப மேலாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

