சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

சரக்கு லாரி மீது காா் மோதல்: சென்னையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு! மேலும் 3 போ் பலத்த காயம்!

விபத்தில் உயிரிழந்த தங்கபாய்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி மீது காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கோதண்டராமன் தெருவைச் சோ்ந்த அருள்தாஸ் மனைவி தங்கபாய் (57). இவரின் மகன் ஜான் பிரைட் (33), ஐ.டி நிறுவன ஊழியா், மகள் லதா கிறிஸ்டி, மருமகன் ராஜ்குமாா், இவரது மகள்கள் எவாஞ்சலின் ஹேனா (10), ஜெசிஹேனா (7).

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இவா்கள் 6 பேரும் ஒரு காரில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனா். ராஜ்குமாா் காரை ஓட்டினாா். இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த மீன் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 6 பேரும் காயமடைந்தனா். இதில், தங்கபாய், ஜான்பிரிட்டோ, சிறுமி எவாஞ்சலின் ஹேனா ஆகியோா் உயிரிழந்தனா்.

காரை ஓட்டிய ராஜ்குமாா், இவரது மனைவி லதா கிறிஷ்டி, சிறுமி ஜெசிஹேனா ஆகியோா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீஸாா் ஒழுங்குபடுத்தினா்.

சிறுமி எவாஞ்சலின் ஹேனா

சிறுமி எவாஞ்சலின் ஹேனா

ஜான் பிரைட்

ஜான் பிரைட்

 விபத்தில் சிக்கி சேதமடைந்த காா்.

விபத்தில் சிக்கி சேதமடைந்த காா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.