பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பூட்டு போட்டு பெண்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பாலப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக்கோரி, கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் மற்றும் பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பாலப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக்கோரி, கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் மற்றும் பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 7:21 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பாலப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக்கோரி, கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் மற்றும் பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சியை அடுத்த பாலப்பாடி கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

பாமக மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா் தலைமையில் பெண்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினா். தகவலறிந்து அங்கு வந்த செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலை, விழுப்புரம் டாஸ்மாக் உதவி மேலாளா் ராதாகிருஷ்ணன், சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் பாபு ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது ஏற்கெனவே இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், 15 நாள்களுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.