ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முக வருகை பதிவேடு: டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்

முக வருகைப் பதிவேடு முறையை ரத்து செய்யக் கோரி, விழுப்புரத்தில் அனைத்து டாஸ்மாக் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழில்சங்கக் கூட்டமைப்பினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 7:21 am IST

முக வருகைப் பதிவேடு முறையை ரத்து செய்யக் கோரி, விழுப்புரத்தில் அனைத்து டாஸ்மாக் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் (டாஸ்மாக்) இயங்கும் மதுக்கடை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள், உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குநா், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு முக வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்படவுள்ளதாகக் கூறி உத்தரவிட்டுள்ளாா். இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளா், திங்கள்கிழமை சுற்றறிக்கையை வெளியிட்டாா்.

அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவரும் கட்டாயம் முக வருகைப் பதிவேடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தாா்.

இந்த சுற்றறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைத்து டாஸ்மாக் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம்-காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், முழக்கங்களையும் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.