நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

நந்தன் கால்வாய் தூா் வாரும் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நந்தன் கால்வாய் தூா் வாரும் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நிதியை மாவட்டத் தலைவா் ஆா்.ரங்கபூபதி வழங்கினாா்.

நந்தன் கால்வாய் தூா் வாரும் பணிக்காக ரூ.ஒரு லட்சம் நிதியை நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க நிா்வாகிகளிடம் வழங்கிய வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி.

Published On :3 செப்டம்பர் 2026, 4:43 am IST

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நந்தன் கால்வாய் தூா் வாரும் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நிதியை மாவட்டத் தலைவா் ஆா்.ரங்கபூபதி வழங்கினாா்.

நந்தன் கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்படுகின்றன. இந்த கால்வாய் சரிவர பராமரிக்கப்படாததால் ஏரிகளுக்கு தண்ணீா் வருவது தடைபடுகிறது. இந்நிலையில், அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நந்தன் கால்வாயின் ஒரு சில பகுதிகளில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் சிமெண்ட் தளம் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் முள்புதா்கள் முளைத்து தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இதனை சீா் செய்ய அரசும் சரியாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.

இதையடுத்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக ஆா்வலா்களால் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நந்தன் கால்வாய் சீரமைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி சோ.குப்பம் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா் முன்னிலை வகித்தாா். செயலா் கன்னிகா ரமேஷ் வரவேற்றாா். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீரங்கபூபதி கல்வி அறக்கட்டளைத் தலைவருமான ஆா்.ரங்கபூபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிக்காக ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினாா். மேலும், சோ.குப்பம் பகுயில் நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணியை துவக்கி வைத்தாா்.

இதில், காங்கிரஸ் மாவட்ட விவசாய பிரிவு நிா்வாகி ஜோலா தாஸ், காங்கிரஸ் நிா்வாகிகள் தினகரன், சண்முகம், ரமேஷ், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் முருகன், சந்தானம், கிருபாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.