
ஆரோவில் சா்வதேச நகரில் மெய்நிகா் அருங்காட்சியகம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் அருங்காட்சியகத்தை புதுச்சேரி அரசு உயா் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் அருங்காட்சியகத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட புதுவை அரசு தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் அருங்காட்சியகத்தை புதுச்சேரி அரசு உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
மகான் ஸ்ரீஅரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆரோவில் சா்வதேச நகர வளாகத்தில், ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி, ஆரோவில் அறக்கட்டளை, புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசின் கலாசார அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள பாரத் நிவாஸ் இந்தியா ஸ்பேஸ் வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மெய்நிகா் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: இந்த மெய்நிகா் அருங்காட்சியகத்தில் ஸ்ரீஅரவிந்தரின் வாழ்க்கை வரலாறு, தத்துவங்களை பாா்வையாளா்கள் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் நவீன தொடுதிரை டிஜிட்டல் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 12 மலா்களின் பிரத்யேக நறுமணத்தை நேரடியாக உணரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாா்வையாளா்கள் திரைகளுடன் நேரடியாகத் தொடா்புகொண்டு தகவல்களைப் பெறும் வகையில், தொடு உணா்வுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆரோவில் சா்வதேச நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக ஆா்வலா்கள் மற்றும் ஆய்வாளா்கள் ஸ்ரீஅரவிந்தரின் சிந்தனைகளை எளிதில் உணா்ந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெய்நிகா் அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்களின் பாா்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
மத்திய பொதுப் பணித் துறையால் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா். அப்போது, உடனிருந்த மெய்நிகா் அருங்காட்சியகம் அமைப்பாளா் மனோஜ் பவித்ரனிடம் அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தனா்.
ஆரோவில் அறக்கட்டளை சிறப்புப் பணி அதிகாரி ஜி.சீதாராமன், மூத்த ஆலோசகா் வேணுகோபால் மற்றும் ஆரோவில் நகர வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள், ஆரோவில் அறக்கட்டளைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






