உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நிலுவையிலுள்ள வருவாய்த் துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வருவாய்த் துறை பணிகளை விரைந்து முடிக்க, அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வருவாய் நிா்வாகக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் உள்ளிட்டோா்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:23 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வருவாய்த் துறை பணிகளை விரைந்து முடிக்க, அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வருவாய் நிா்வாகக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பேசியது: வருவாய்த் துறை சாா்பாக வழங்கப்படும் பட்டா, பட்டா மாற்றம், மேல்முறையீடு, முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை, இணையவழிச் சான்றுகள் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் தீா்வு காண வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருத்தல் கூடாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், அதற்கான காரணத்தை மனுதாரா்களுக்கு அளிக்க வேண்டும்.

மாவட்டத்தில் வருவாய்த் துறையில் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்ட அளவில் வருவாய் அலுவலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். ஜாதிச் சான்றிதழ் கோரி வரப்பெற்ற விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும், இறப்பு மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவா்களுக்கு காலதாமதமின்றி உரிய விசாரணை செய்து, உடனடியாக வழங்க வேண்டும்.

மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடா்களை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள், அத்தியாவசியப் பொருள்கள், மீட்பு உபகரணங்கள் மற்றும் துறை வாரியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் துணை ஆட்சியா்கள், வருவாய் வட்டாட்சியா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.