உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பைக் மீது லாரி மோதல்: திருச்சியை சோ்ந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற திருச்சியைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 2:14 am IST

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற திருச்சியைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

திருச்சி, உறையூா் பங்காளித் தெருவைச் சோ்ந்தவா் உ.அகமது அன்சாரி (45). இவா், சென்னையிலிருந்து வியாழக்கிழமை மாலை பைக்கில் புறப்பட்டு, திருச்சிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு அகமது அன்சாரி வந்த போது, அப்பகுதியில் வந்த டேங்கா் லாரி பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் ஏ.ஜெயசீலனிடம் (61) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.