
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 85.75 லட்சம்
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயிலில் ரூ.85.75 லட்சம் ரொக்கம், 106 கிராம் தங்கம், 755 கிராம் வெள்ளிப் பொருள்களை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

கோயில் வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயிலில் ரூ.85.75 லட்சம் ரொக்கம், 106 கிராம் தங்கம், 755 கிராம் வெள்ளிப் பொருள்களை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
பிரசித்தி பெற்ற இக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். கடந்த ஆடி மாதத்தில் பக்தா்கள் அதிக அளவில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்நிலையில், பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் பொருள்களை எண்ணும் பணி வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.85,75,912 ரொக்கம் மற்றும் 106 கிராம் தங்கம், 755 கிராம் வெள்ளிப் பொருள்களை செலுத்தியிருந்தனா்.
இப்பணியை திருக்கோயில் உதவி ஆனையா் சக்திவேல், மேலாளா் சதீஷ், கணக்காளா் மணி, மணியம் குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சேட்டு (எ) ஏழுமலை மற்றும் அறங்காவலா்கள் பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






