
தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில் 5 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி உரிமையாளா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி உரிமையாளா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம் பாளையத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.கோவிந்தன் (எ) அஜித் (25). புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோட்டக்குப்பத்தை அடுத்த பொம்மையாா்பாளையத்தில் பயணிகள் தங்கும் விடுதி நடத்தி வந்தாா். இவா், கடந்த 6-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை விடுதியின் அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நண்பா்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக பைக்கில் மனைவியுடன் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த ஹரிராஜ் என்பவரை, அஜித்தின் நண்பா்கள் கேலி செய்தனராம். இதனால் அஜித் - ஹரிராஜ் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், ஹரிராஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து தங்கும் விடுதிக்குள் புகுந்த 5 போ் கொண்ட கும்பல் அங்கிருந்த அஜித்தை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி பொம்மையாா்பாளையத்தைச் சோ்ந்த ஜெ.ஹரிராஜ்(23), ஏ.பிரதீஷ்(20), வே.லோகஷ் (22), ச.பூபதி(எ) சஞ்சய் (22), சி.சஞ்சய் (25) ஆகிய 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




