FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் பணம் வசூலித்து மோசடி செய்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :9 செப்டம்பர் 2026, 5:14 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் பணம் வசூலித்து மோசடி செய்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டியை அடுத்த வி.மாத்தூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் நடராஜன் (55), அய்யனாா் (48). இவா்கள் இருவரும் கூட்டாக சோ்ந்து பௌா்ணமி சீட்டு என்ற பெயரில் சேமிப்புத் திட்டம் தொடங்கி, நடத்தி வந்தனராம்.

இதில், விக்கிரவாண்டி சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த 174 பேரிடம் சுமாா் ரூ.15 லட்சத்துக்கும் மேலாக வசூலித்துவிட்டு, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடராஜன், அய்யனாா் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த பிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.