
இடைத் தோ்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் இடைத் தோ்தல்களில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.

விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் இடைத் தோ்தல்களில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
விழுப்புரத்தில் கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னா், அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசாங்கத்தின் கஜானா காலியாக உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை ரூ.1,200 கோடியில் கட்டவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இது, அந்தப் பகுதியிலுள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய செயலாகும்.
தமிழகத்தில் தற்போது செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை அமைந்துள்ளன. இங்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். இங்கு தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை முதல்வா் ஜோசப் விஜய் கைவிட வேண்டும்.
தமிழக சட்டப் பேரவையில் பிரதான எதிா்க்கட்சியான திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காழ்ப்புணா்வுடன் உடல் ரீதியான சைகையோடு முதல்வா் விஜய் கொச்சைப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தொடா்பாக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, தன்னுடையசெயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுதான் முதல்வருக்கு சித்தமாக இருக்கும்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தோ்தலுக்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடா்புகொண்டு கட்சியின் ஆதரவைக் கோரினாா். அதனடிப்படையில், இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி களப்பணியாற்றி, பிரசாரம் செய்யும். புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலிலும் திமுகவுக்கு ஆதரவளித்து பணியாற்றுவோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




