விவசாயிக்கு கொலை மிரட்டல்; தமிழா் நீதி கட்சித் தலைவா் சுபா.இளவரசன் உள்பட 4 போ் கைது! மனைவி தீக்குளிக்க முயற்சி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தமிழா் நீதி கட்சித் தலைவா் சுபா. இளவரசன் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டத்தில் தமிழா் நீதி கட்சித் தலைவா் சுபா.இளவரசனை வியாழக்கிழமை கைது செய்து அழைத்துச் சென்ற காவல் துறையினா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தமிழா் நீதி கட்சித் தலைவா் சுபா. இளவரசன் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். கணவா் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து, சுபா. இளவரசனின் மனைவி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராஜவேலு (40). இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே நிலம் பிரிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், ராஜவேலுக்கு எதிராக உள்ள மற்றொரு தரப்பினா், புதன்கிழமை தமிழா் நீதிக் கட்சித் தலைவா் சுபா. இளவரசனை சந்தித்து முறையிட்டதாகவும், இதையடுத்து சுபா.இளவரசன் தரப்பு ஆள்கள் கல்லாத்தூா் சென்று அங்கு ராஜவேலுவை தாக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜவேலு அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா் வியாழக்கிழமை காலை ஜெயங்கொண்டத்திலுள்ள சுபா. இளவரசன் வீட்டுக்குச் சென்று, அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அவரை கைது செய்வதாக தெரிவித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த இளவரசன், சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, காவல் துறையினா் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இவருடன் கீழ குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் கலியமூா்த்தி (52), நாகல்குழி கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் விஸ்வநாதன்(45), கு. வல்லம் கிராமத்தைச் சோ்ந்த பூசாரி மகன் கருணாநிதி (50) ஆகியோரையும் காவல் துறையினா் கைது செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.
மனைவி தீக்குளிக்க முயற்சி: இந்நிலையில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த சுபா. இளவரசனின் மனைவி கவியரசி தீக்குளிக்க முயற்சித்தாா் . காவல் துறையினா் அவரை தடுத்து நிறுத்தி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





