தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

எம்எல்ஏ-க்களை கைது செய்வதால் திமுகவை முடக்கிவிட முடியாது: மார்க்கண்டேயன் எம்எல்ஏ

திமுக எம்எல்ஏ-க்களை கைது செய்வதால் திமுகவை முடக்கிவிட முடியாது என விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறியது குறித்து...

DMK MLA Markandeyan

செய்தியாளர்க்ளுடன் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் - ANI

Published On :

திமுக எம்எல்ஏ-க்களை கைது செய்வதால் திமுகவை முடக்கிவிட முடியாது என விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏ-க்களை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கைது செய்யப்பட்டது குறித்து விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் அவர் பதிலளித்துப் பேசியதாவது, "தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து விட்டன. தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருபவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முதலீடுகள் குறைந்து விட்டன.

எம்எல்ஏ-க்களை கைது செய்வதால் திமுகவை முடக்கிவிட முடியுமா? அப்படியெல்லாம் திமுகவை முடக்கிவிட முடியாது. இதற்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது. தீவிரவாதிகளை நடத்துவதுபோல தவெக அரசு நடத்துகிறது.

ஜனநாயகத்தில் தனது கருத்துகளைச் சரியான முறையில் எடுத்துவைக்கும் ஓர் அரசியல் கட்சி திமுக.

தமிழக பட்ஜெட்டை மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இருந்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை" என்று தெரிவித்தார்.

Summary

Arresting MLAs cannot cripple the DMK, says MLA Markandeyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.