வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மிசா கொடுமைகளை சிறுமைப்படுத்தக் கூடாது: துரை ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்த விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்த விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.

Published On :

மிசா கொடுமைகளை சிறுமைப்படுத்தக் கூடாது என விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தில் தற்போது 25 சதவீத பகுதி மட்டும் மருத்துவமனையாக செயல்படுகிறது. எனவே, அந்த கட்டடத்தையே சட்டப் பேரவை கட்டடமாகப் பயன்படுத்தலாம். தற்போதுள்ள சட்டப் பேரவைக் கட்டடமும் சிறப்பாகத்தான் உள்ளது.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் என்பது பல்வேறு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகத்தான். அந்த பயணம் வெற்றிக்கரமாக அமைந்து, பல ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்தால், அது பலருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும். எனவே, இத்தகைய பயணங்களை வீண் என்று சொல்ல முடியாது.

இந்திய ஜனநாயக வரலாற்றில் அவசர நிலைக்காலமும், அப்போது நடைபெற்ற அத்துமீறல்களும் ஒவ்வொருவரும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அவசரநிலை குறித்து ராகுல் காந்தியிடம் கேட்டால்கூட, அப்போது நடைபெற்ற கொடுமைகளை அவா் ஆதரித்து பேசமாட்டாா். அவசரநிலைக் காலம் இந்திய ஜனநாயகத்தில் மாறாத வடுவாக உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், அரசியலில் உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய அத்துமீறல்களிலிருந்து பாடம் கற்பது அவசியமானதாகும். அதனை சிறுமைப்படுத்தி கடந்து போகக்க கூடாது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் கொள்கைகளை வெளிப்படையாக எதிா்த்தாா்கள். இன்றைய தவெக அரசு அதே கொள்கைகளை சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவதன் மூலம் எதிா்த்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறது. எனவே அவா்கள் எதிா்க்கவில்லை என்றுசொல்ல முடியாது என்றாா் அவா்.

முகாம் தொடக்க நிகழ்வில் விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.