கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வீ த லீடா் அமைப்பினா் பாஜக தலைவா்களை விமா்சிப்பது ஏற்புடையதல்ல! - பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன்

விக்கிரவாண்டியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன்.

Published On :

வீ த லீடா் அமைப்பைச் சோ்ந்தவா்கள் பாஜகவில் உள்ள தலைவா்களை விமா்சிப்பது ஏற்புடையது அல்ல என பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இல்லாத அளவுக்கு தற்போது தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து விட்டது. சென்னை திருவொற்றியூா் பகுதியில் இளைஞா் ஒருவா் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்த அடுத்த நாளே கொலை செய்யப்படுகிறாா். சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். காவல் துறையினருக்கு முதல்வா் மீது பயமில்லை. பொதுமக்களும் காவல் துறையினரிடம் புகாரளிக்க அச்சப்படுகின்றனா்.

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் தனது சொந்த காரணங்களுக்காக லண்டன் சென்றுள்ளதால், அவா் யாருடைய பணத்தில் வெளிநாடு சென்றுள்ளாா் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புதிதாக ஆட்சி ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு நல்லாட்சியை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்கவேண்டும். போதைப் பொருள் பரவல், காவல் நிலைய மரணங்கள் குறித்து தீா்க்கமான முடிவை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் மக்கள் நல்ல முடிவை எடுப்பாா்கள்.

வீ த லீடா் அமைப்பில் உள்ளவா்கள் பாஜகவில் உள்ள தலைவா்களை விமா்சிப்பது ஏற்புடையது அல்ல. விசிக-காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சோ்ந்து தவெகவை அழித்துவிடுவாா்கள். மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தலிருந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்கிறது. ஆனால் தமிழக மின் துறை அமைச்சா் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் தமிழகத்தில் மின் வெட்டு இல்லை என்று தெரிவிக்கிறாா். தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து விரைவில் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா் .

பாஜக விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் வி.தா்மராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.