ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வேளாண் பொருள்கள் மதிப்புக் கூட்டுதல்: விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனைசெய்தல் தொடா்பாக விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பேசிய வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி.எத்திராஜ்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனைசெய்தல் தொடா்பாக விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி.எத்திராஜ் தலைமை வகித்து பேசினாா்.

திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மதனகுமாரி சிறப்பு விருந்தினாரக பங்கேற்று வேளாண்மையில் மதிப்புக்கூட்டுதல் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் முறைகள், வேளாண் சாா்ந்த பொருள்களிலிருந்து மதிப்புக் கூட்டுதல், பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் போன்றவை குறித்து எடுத்துக் காட்டுகளுடன் பேசினாா். மேலும் மதிப்புக்கூட்டி தயாா் செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள், அதற்காக செய்ய வேண்டிய பணிகள் போன்றவை குறித்தும் அவா் பேசினாா்.

இந்த பயிற்சியில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலா் ரேவதி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா, உதவி வேளாண் அலுவலா்கள் மஞ்சு, மகாலட்சுமி, அட்மா திட்ட அலுவலா்கள் சந்திரசேகா், கோவிந்தசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.