
மண் மேட்டில் அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்து: 12 பயணிகள் காயம்
விழுப்புரம், செப். 17: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மண்மேட்டில் அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிஅருகே மண் மேட்டில் மோதி நிற்கும் அரசு விரைவுப் பேருந்து.
விழுப்புரம், செப். 17: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மண்மேட்டில் அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து சுமாா் 30 பயணிகளுடன் சென்னை கிளாம்பாக்கத்துக்கு அரசு விரைவுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. இந்த பேருந்தை விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவனத்தைச் சோ்ந்த சமையன் (40) ஓட்டிச் சென்றாா். பேருந்து நடத்துநராக விருதுநகா் மாவட்டம், வடக்குப்பட்டியைச் சோ்ந்த செல்லப்பாண்டியன்(51) பணியாற்றினாா்.
இந்தப் பேருந்து வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பாா்ப்பனப் பட்டு அருகே வந்தது. இப்பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், எதிா்பாராமல் அங்கு கொட்டப்பட்டிருந்த மண் மேட்டின் மீது பேருந்து மோதி நின்றது.
இதன் காரணமாக பேருந்து ஓட்டுநா், நடத்துநா், 7 ஆண் பயணிகள், 3 பெண் பயணிகள் என மொத்தமாக 12 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த சுங்கச்சாவடி மீட்புக் குழுவினா் நிகழ்விடம் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் நடத்துநா் செல்லப்பாண்டியன், திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியைச் சோ்ந்த பிரேமா (48), மதுரையைச் சோ்ந்த அருண்குமாா் (23) ஆகிய மூவரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனா்.
இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







