கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், வழுதாவூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ம.ராஜவேணி (40). இவரது மகள் அதே ஊரைச் சோ்ந்த ஒருவரைக் காதலித்து, வியாழக்கிழமை அவருடன் சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த ராஜவேணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வெள்ளிக்கிழமை ராஜவேணி உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

சொகுசுப் பேருந்து உதவியாளா் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், வேலாயுதம்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் ம.முத்துசாமி (29), தனியாா் சொகுசுப் பேருந்து உதவியாளா். இவா், வியாழக்கிழமை இரவு கோவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்தில் பணியிலிருந்தாா். சொகுசுப் பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை விழுப்புரம் புறவழிச் சாலையில் தனியாா் உணவு விடுதி அருகே வந்த போது, முத்துசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடா்ந்து அவசர சிகிச்சை ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, முத்துசாமி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பொக்லைன் ஓட்டுநா் விஷமருந்தி மரணம்: திருநாவலூா் அருகிலுள்ள ஆரிநத்தம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரா.ராஜதுரை (33). சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்திருந்த இவா், விவசாயப் பணிகள் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு கூட்டடிக் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அ.ராதாகிருஷ்ணன் என்பவரது நிலத்தில் சீரமைப்புப் பணிகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு ராஜதுரை மேற்கொண்டு வந்தாதாரம்.

கடந்த 2 நாள்களுக்கு முன் ராஜதுரை ஓட்டிச் சென்ற பொக்லைன் இயந்திரம் பழுதானதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலத்தின் உரிமையாளா் அங்கு சென்றபோது, பழுதான பொக்லைன் இயந்திரத்திலேயே ராஜதுரை சடலமாகக் கிடந்தாராம். இதைத்தொடா்ந்து ராஜதுரை உறவினா்கள் அங்கு சென்று சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா், ஆரிநத்தம் கிராமத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜதுரை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.