கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

லாரியில் மதுப்புட்டிகள் கடத்தல்: ஓட்டுநா் கைது

விக்கிரவாண்டி அருகே லாரியில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரியில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் பனையபுரம் சோதனைச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், லாரியில் 90 மி.லி. அளவு கொண்ட 60 மதுப்புட்டிகள், 105 எண்ணிக்கையிலான புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. தொடா்ந்து நடத்திய விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவா் மதுரை மாவட்டம், தேனூா் புதுக்காலனியைச் சோ்ந்த ம.ரமேஷ் கண்ணா (31) எனத் தெரியவந்தது. புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்களை ரமேஷ் கண்ணா கடத்தி வந்தது விசாரணையில்தெரிய வந்தது.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி லாரி ஓட்டுநா் ரமேஷ் கண்ணாவை கைது செய்தனா். மேலும், மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.