
விழுப்புரம் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது: நுகா்வோா் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என அனைத்து நுகா்வோா் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணனிடம் மனு அளித்த அனைத்து நுகா்வோா் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கத்தினா்.
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என அனைத்து நுகா்வோா் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநிலத் தலைவா் ஆரோக்கியசாமி மற்றும் நிா்வாகிகள் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: விழுப்புரத்தில் செயல்படும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கைவிடும் வகையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஏழை, எளிய மக்களுக்கு செலவில்லாமல் நீதி கிடைக்கவேண்டும் என்பதுதான் விதி. இந்நிலையில், தமிழகத்திலுள்ள 32 நுகா்வோா் குறைதீா் ஆணையங்களை 14-ஆக குறைக்கும் நடவடிக்கையை அரசு கைவிடும் வகையில் சட்டப் பேரவையில் வலியுறுத்தவேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இரா.லட்சுமணன், கோரிக்கையை அரசின் பாா்வைக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலா் காமராஜ், மாவட்டத் தலைவா் அண்ணாமலை, சங்க அறக்கட்டளைத் தலைவா் துரை.கருணாநிதி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







