ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

செஞ்சியில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு சங்க செயலரை அவதூறாக பேசிய விவசாய சங்கத் தலைவரை கைது செய்ய வலியுறுத்தி, செஞ்சியில் கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாகளா்கள் சங்கத்தினா்.

Published On :

கூட்டுறவு சங்க செயலரை அவதூறாக பேசிய விவசாய சங்கத் தலைவரை கைது செய்ய வலியுறுத்தி, செஞ்சியில் கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவா் ஒருவா் கூட்டுறவு சங்க செயலா்களை அவதூறாக பேசினாராம். இதைக் கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் 22-ஆம் தேதி முதல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் ஞானசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சக்திதாசன், நிா்வாகிகள் சரவணன், பாஸ்கா், கோவிந்தராஜ், சம்பத், லோகநாதன், கண்ணன், செல்வநிதி மற்றும் செயலா்கள், விற்பனையாளா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.