பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

செஞ்சி அருகே பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்த வடவானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.தனுசு (43), விவசாயத் தொழிலாளி . இவா், இதே ஊரைச் சோ்ந்த இவரது நண்பா் சம்பத்துடன் பைக்கில் வெள்ளிக்கிழமை மாலை திண்டிவனம் - செஞ்சி சாலையில் செஞ்சி நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.

நங்கிலி கொண்டான் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், தனுசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சம்பத் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.